பரனே உந்தன் சிவ நாமம்
தொழுதே நாழும் உயிர் வாழும்
எந்தன் வாழ்வு உன் அடி சேர
கைலாச வாச உன்
உறை இடம் நாடி
ஊன் மறந்து
உறக்கம் துறந்து
உடல் மறைக்க
உலர் துணி ஒன்று கொண்டு
பயனம் பொழுதில்
தேவை என்றால்
பசியும் என்றால்
கையேந்தி பிச்சை வாங்கி
வினை தீர பாடு பட்டு
உன் திருவடியினை
தொழ வருவேன்
காலத்தில் கலியும் சுற்றும்
அத்தோடு மனிதன் வாழ்வு முற்றும்
பாவத்தில் பரனே உந்தன்
காளத்தி லிங்க ரூபம் கண்டேன்
தில்லைநாதா உன் திருநடனம்
ருத்ரனே உந்தன் ஆனந்த தாண்டவம்
கண்ணில் கான முன் ஜென்மம்
தேவன் ஆனேனோ
இல்லை உன்னை நினைத்து
தனியே தவம் புரிந்த முனிவனும் நானோ
வந்த என்னை அனைத்துவிடு
வழியை எனக்கு மறைத்து விடு
உன் பாதம் சரணம்
சிவ சிவ பரனே
அருணாச்சலனே
கையிலை ஆளும் காளத்தீ ஈசா..
Thursday, November 27, 2008
சிவம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Sairam
Post a Comment